×

வன அலுவலர்கள் பாஸ்கர், ரமேஷ், ஈஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கிரிராஜன் நன்றி கூறினார். கரூர் பகுதி கடைகளில் முத்திரையிடாமல் பயன்படுத்திய 7 மின்னணு தராசுகள் பறிமுதல்

கரூர், பிப். 7: கரூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கடைகளில் முத்திரையிடாமல் பயன்படுத்திய 7 தராசுகள், எடை கற்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.கரூர் காந்திகிராமம், பசுபதிபாளையம், குளத்துப்பாளையம், காமராஜ்நகர் மீன்மார்க்கெட் பகுதிகளில் உள்ள அனைத்து இறைச்சி, மீன் கடைகள் மற்றும் சந்தைகளில் கரூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) கிருஷ்ணவேணி தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வாளர் பாலகிருஷ்ணன், முதல்சரக தொழிலாளர் உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், 2ம் சரக உதவி ஆய்வாளர் பழனிச்சாமி, மணப்பாறை தொழிலாளர் உதவி ஆய்வாளர் வெங்டாஜலபதி, கரூர் முத்திரை ஆய்வாளர் பிச்சைக்கனி ஆகியோர் ஆய்வு செய்தனர். இந்த கூட்டாய்வின்போது முத்திரையிடப்படாமல் பயன்பாட்டில் இருந்த 7 மின்னணு தராசுகள், எடை கற்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் கடைகள், நிறுவனங்களில் பயன்படுத்தும் மின்னணு தராசுகள் மற்றும் எடைகற்கள் உரிய காலத்தில் கரூர் வெண்ணைமலையில் உள்ள ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை வளாகத்தில் இயங்கி வரும் முத்திரை ஆய்வாளர் அலுவலகத்தில் பரிசீலனைக்கு உட்படுத்தி முத்திரையிடப்பட்ட பின்னர் பயன்படுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அபராதம் மற்றும் நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.கடைகள், நிறுவனங்களில் பயன்படுத்தும் மின்னணு தராசுகள் மற்றும் எடைகற்கள் உரிய காலத்தில் கரூர் வெண்ணைமலையில் உள்ள ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை வளாகத்தில் இயங்கி வரும் முத்திரை ஆய்வாளர் அலுவலகத்தில் பரிசீலனைக்கு உட்படுத்தி முத்திரையிடப்பட்ட பின்னர் பயன்படுத்த வேண்டும்.

Tags : Forest officials ,Bhaskar ,Ramesh ,Eswari ,Girirajan ,area stores ,Karur ,
× RELATED நிலத்தை அளக்க எதிர்ப்பு டூவீலருக்கு தீ வைப்பு